சவுதி அரேபியா வழியாக இஸ்ரேல் சென்ற ஏர் இந்தியா விமானம்!

சவுதி அரேபியா வான்வெளி வழியாக முதன் முறையாக ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடைந்தது.

ஏஐ 139 எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இஸ்ரேல் நாட்டின் நேரப்படி அந்த நாட்டின் டெல் அவிவ்வில் உள்ள விமான நிலையத்தை 22.15 மணிக்கு சென்றடைந்தது. சவுதி அரேபியா தடையை நீக்கிக் கொண்ட பின்னர் முதன் முறையாக ஏர் இந்தியா விமானம் சென்று இருப்பது வரலாற்று முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் சுற்றுலாத்துறை அமைச்சர் யாரிவ் லெவின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. நாம் புதிய யுகத்தில் உள்ளோம். இந்தியாவில் இருந்து மேலும் பல இந்தியர்கள் இஸ்ரேலுக்கு சுற்றுலா வருவார்கள் என்று கருதுகிறோம்.

அதேபோல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு வருவார்கள். நேரடி விமான சேவை இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுக்கச் செய்யும்'' என்றார்.

இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்கும் இடையே பறக்கும் ஏர் இந்தியா விமானம் குறுகிய பாதையில் இயக்கப்படுகிறது. சவுதி அரேபியா வழியாக குறுகிய பாதையில் செல்வதால் நேரம் குறைகிறது. இந்த சிறப்பு அனுமதி இந்தியாவுக்கு மட்டுமீ சவுதி அரேபியா வழங்கியுள்ளது.

மற்ற விமானங்கள் இஸ்ரேல் சென்றடைய 9 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பிடிக்கும். ஆனால், ஏர் இந்தியா விமானம் 7.15 நிமிடத்தில் சென்றடையும்.பெரும்பாலான முஸ்லிம் மற்றும் அராபிய நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. ஆதலால் அந்த நாடுகளுக்கு வான்வெளி பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. 

இதுகுறித்து டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த முயற்சிக்குப் பின்னர் தற்போது விமான சேவை துவங்கியுள்ளது. இது முழுக்க இருநாட்டு பிரதமர்களின் முயற்சி. பண்பாடு, கலாச்சாரம், வர்த்தகம் என பல்வேறு மட்டங்களில் இருநாடுகளுக்கும் இடையே உறவு விரியும்'' என்றார்.

ஏர் இந்தியா விமானம் ஓமன், சவுதி அரேபியா ஜோர்டான் வழியாக இஸ்ரேல் சென்றது. 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018