கூட்டமைப்புக்கு ரணில் வழங்கிய வாக்குறுதிகள் பத்து!

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.

தற்போதைய “நல்லாட்சி” அரசாங்கம் பதவிக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு குறித்தோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறும் தமிழர் தரப்பு விமர்சகர்கள், ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க எழுத்து மூல உறுதி மொழிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதனால், 10 நிபந்தனைகளை விதித்தே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீர்மானங்கள் தொடர்பில் அவருடைய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுதல்.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல்.

பொதுமக்களின் காணிகள் அனைத்திலும் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதை உறுதி செய்தல்.

அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கல்.

போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்தல்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பாதுகாத்தல்.

வடக்கு, கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தல்.

வடக்கு, கிழக்கில் தகுதியுள்ள ஆட்கள் இருக்கும் பட்சத்தில் வெளிமாகாணங்களை சேர்ந்தவர்களை அங்கு பணிக்கு அமர்த்துவதை தவிர்த்தல்.

வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களுக்கு தமிழ் பிரதேச செயலாளர்களை நியமித்தல்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது, அந்த மாகாண பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்.

என்பனவே பிரதமரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019