மஹிந்தவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! – சம்பந்தனுக்கு வலை விரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஒருவர் என்பது தற்போது தெளிவாகத் தெரிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இதன்காரணமாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை, அரசாங்கத்தின் எதிர்கட்சியாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொண்டுள்ளமையினால், எதிர்க்கட்சியாக வரும் தகுதி அதற்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எதிர்கட்சி தலைமைத்துவம் குறித்து அடுத்து வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தோல்வியைத் தொடர்ந்து சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைக் கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தினேஷ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோரின் கருத்துகள் இதனை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு எதிர்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே மஹிந்த அணியின் அடுத்தடுத்த பாய்ச்சலினால் ரணில், மற்றும் மைத்திரி தரப்பு ஆட்டங்கண்டுள்ள நிலையில் அடுத்ததாக சம்பந்தன் மீதும் இலக்குகள் வைக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசியலில் அடுத்தகட்டம் பல்வேறு திருப்புமுனைகளைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018