ஐ.தே.க.யில் உரிய மாற்றம் இன்றேல் மீண்டும் போராட்டம்- ரங்கே பண்டார

ஐ. தே. கட்சிக்குள் உரியவாறான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் எனவும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் எந்த சந்தர்ப்பத்திலும்  தீர்மானம் எடுக்கப் பின்நிற்கப் போவதில்லையெனவும்  இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைத் தீர்ப்பதற்கு தாமும் தமது குழுவினரும் தேவையான ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் இம்முறை ஐ. தே. கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஸ்திரமானதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் எந்தவித மாற்றமும் நிகழ மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் நேற்று அறிவித்திருந்தார்.

ஐ.தே.க.யின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்பதே இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018