நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கம் பலமடைந்துள்ளது

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் ஆதரவாக வாக்களித்திருந்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருப்பேன் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்" கூட்டு எதிர்கட்சியினருக்கே நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்பட்டது. அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் ஆதரவு கொடுத்திருந்தால் எனக்கு அமைச்சரவையில் இருப்பதற்கான எந்தவித தகுதியும் இல்லை பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், நான் கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து விலகியிருந்திருப்பேன்.

உண்மையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஶ்ரீலங்கா சுகந்திர கட்சியில் பலர் சிக்கிக்கொண்டனர். சிலர் நம்பிக்கையில்லாப்  பிரேரணைக்கு சார்பாக வாக்களித்து ஜனாதிபதியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டனர்.

ஆனால் தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் திருடர்களை பிடிபடவில்லை. இப்போதாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது மிகமுக்கியமாகும். அது தொடர்பாக அரசியல்வாதி என்ற வகையில் சட்டத்தை கையில் எடுப்பது சரியில்லை. சட்டப்படி நீதிமன்றத்தினூடாக நடவடிக்கையெடுப்பதே முறையான வழியாகும்." எனக் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019