மஹிந்தவின் பயண விவரங்கள் எவையும் தம்மிடம் இல்லையாம்! – கையை விரித்தது ஜனாதிபதி செயலகம்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடக்குக்கான மற்றும் வெளிநாடுகளுக்கான பயண விவரங்கள் எவையுமே ஜனாதிபதி செயலகத்தில் இல்லை. அவை எங்கே இருக்கின்றன என்று தெரியாது.”

– இவ்வாறு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஆட்சிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குறித்த காலப்பகுதிக்குள் வடக்கு மாகாணத்துக்கு எத்தனை தடவைகள் பயணம் மேற்கொண்டுள்ளார், வெளிநாடுகளுக்கு எத்தனை தடவைகள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற விவரங்களையும், அந்தப் பயணத் திகதிகளையும் வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்குத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் தகவல் வழங்கும் அதிகாரி எஸ்.ரவிந்திர அந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயண விவரங்கள் தொடர்பான விவரங்கள் எவையும் இந்தப் (ஜனாதிபதி செயலகம்) பணியகத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 3ஆம் திகதி ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் அதிகாரியொருவர் ஆணைக்குழுவில் முற்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயண விவரங்கள் எவையும் ஜனாதிபதி செயலகத்தில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அந்தப் பயண விவரங்கள் எங்கே இருக்கின்றன என்று அவரிடம் மேன்முறையீடு செய்த தமிழ்ப் பத்திரிகை ஒன்றால் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயணங்களுக்கான பணம் எப்படி விடுவிக்கப்பட்டது என்றும் கேட்கப்பட்டது.

அந்தக் காலத்தில் (2005 2015) பாதுகாப்புக் காரணங்களால் அவரது பயண விவரங்களை வேறு தரப்பினர் அதாவது, அவரது பாதுகாப்புத் தரப்பினர் கையாண்டிருக்கலாம். ஜனாதிபதி செயலகத்தில் எந்தவொரு ஆவணங்களும் இல்லை என்று பதிலளித்துள்ளார் ஜனாதிபதி செயலகத்திலிருந்து முன்னிலையான அதிகாரி.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018