16 பேரையும் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினால் கூட்டாகவே வெளியேறுவோம்;மஹிந்த

அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தாமாக விரும்பி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும், அவர்களை யாரும் பலவந்தமாக அரசாங்கத்திலிருந்து ​வெளியேற்ற முயற்சித்தால் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒன்றாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறலாமென்று தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறானாலும் கட்சியிலிருந்து எவரையும் நீக்கவோ அல்லது கட்சியை பிரிக்கவோ மத்திய செயற்குழு அனுமதிக்காது. கட்சி என்றதன் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து செயற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் விருப்பமாகும். எமது கட்சிக்குள் பிளவு வரக்கூடாது என்பதில் ஜனாதிபதியும் உறுதியாக இருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லையென்கின்ற போதிலும் ஐ.தே.கவில் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குற்றங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் மட்டுமே நாம் ஐ.தே.கவுடன் அரசாங்கத்தை தொடர விரும்புகின்றோம்.

அவர்கள் தமது தவறுகளையும் குற்றங்களையும் உணர மறுப்பார்களாயின் இணைந்து அரசாங்கம் நடத்துவது அர்த்தமற்றது எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019