உரிமைக் குரலெழுப்ப கூட்டமைப்பிற்கே அதிகாரமுண்டு: அசாத் சாலி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருப்பதாக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கூட்டமைப்பு நிபந்தனை விடுத்து பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததில் எவ்வித தவறும் இல்லை என்றும் கூறினார்.

கொழும்பில் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்

”தற்போது, பொதுஜன பெரமுன என்ற மொட்டுச் சின்னக்காரர்கள் தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமராக முடியாமைக் குறித்து, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கண்ணீர் விட்டு அழுகிறார். பிரதமர் கனவினைக் கலைத்துவிட்டு தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அழுகின்றார். சம்பந்தரை நீக்கிவிட்டு அதனைத் தமக்கு கொடுக்குமாறு கேட்கின்றார்.

இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருமுறை பதவி வகித்த மஹிந்த, கீழிறங்கி அற்பத்தனமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஏங்குகின்றார். இப்பொழுது திருமண வீடுகளுக்கு பலவந்தமாக செல்கிறார். யாரும் அவரை அழைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவராகவே செல்கிறார்.

கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்பந்தம் செய்து, அவர்களுக்கு நிறைய விடயங்களைக் விட்டுக் கொடுக்கவுள்ளதாக கூறுகிறார்.

வடக்கில் தமிழர்களின் சொத்துக்களையும், கிழக்கில் முஸ்லிம்களின் சொத்துக்களையும் யுத்தகாலத்தில் இராணுவத்தினர் பலவந்தமாக பெற்றுக் கொண்டனர். அவற்றை மீளக் கொடுக்குமாறு கோருவது பிழையா?

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் பெற்ற காணிகளை மீள ஒப்படைப்போம் என்று கூறினார்கள். பிரதமருக்கு வாக்களிக்க, அதனை இப்போது செய்யுமாறு கோருவது தவறா? மக்களின் சொத்துக்களை மஹிந்த அச்சுறுத்தி சூரையாடினார். அதனை மக்கள் மீளக் கோருவது தவறில்லை. அவற்றை மீளக் கோருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

இந்த அரசாங்கத்துடன் கலந்துரையாடி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க, அவர்கள் கோரிய 16 விடயங்களில் 10 விடயங்களைக் கொடுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டமைக்காக சந்தோசப்படுங்கள்” என்றார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதககலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018