பிரேரணையின் போது த.தே.கூ எதிராக வாக்களித்தமையாலே பெறுபேறு மாறியது: வாசுதேவ

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமையாலேயே பெறுபேறு மாறியதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடுநிலை வகிக்க இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் பிரதமருக்கு எதிராகவும் வாக்களிக்கவிருந்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவிருந்தது. நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என அனைவரும் எண்ணினார்கள். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிய பின்னர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறிய கட்சிகள், நடுநிலை வகிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தமையால், எமது திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் பின்வாங்கினர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பின்வாங்கினர். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அவர்களின் சமூகத்தவர்களை காட்டிக்கொடுத்துவிட்டனர்.

உண்மையில் கூறினால், பிரதமர் இதில் வெற்றிபெறவில்லை. அவரை காப்பாற்றிக்கொண்டார். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமைக்கு இதுவே காரணம். இதனாலேயே பெறுபேறு முற்றாக மாறியது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018