மனோ கணேசனின் வசமாகிறது மைத்திரியின் அமைச்சு?

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வசமுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோ கணேசனின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

கூட்டரசின் அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது விஞ்ஞானபூர்வமான அடிப்படையிலேயே அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவுள்ளன.

இதன்படி ஒரே விடயதானத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு தனித்தனியே அமைச்சுகளை நியமிக்காமல் அவை அனைத்தையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவருவதே மைத்திரியின் திட்டமாக இருக்கின்றது. தனது இந்த நிலைப்பாட்டை நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது கட்டுப்பாட்டின்கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோ கணேசன் தற்போது வகிக்கும் அமைச்சுடன் இணைக்கப்படும் என்ற தகவலையும் அரச தலைவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அமைச்சுகளுக்கும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018