லசந்தவை கொலை செய்ய பொன்சேகாவே உத்தரவிட்டார்! : தொடரும் அதிரடி குற்றச்சாட்டுக்கள்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

லசந்த கொலை தொடர்பான உத்தரவு பிறப்பித்த குற்றச்சாட்டில் இராணுவ கட்டளைத் தளபதி அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு எனில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவையும் கைது செய்ய வேண்டும்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் சரத் பொன்சேகா பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்றின் ஹன்சார்ட் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்த கொலைக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, படைவீரர்களை இந்த அரசாங்கம் வேட்டையாடி வருகின்றது என முன்னாள் இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் விடயம் என்றால் அந்த விடயத்தை சரத் பொன்சேகாவிடம் பிரதமர் ஒப்படைக்கின்றார்.

நான் சொல்லுவதனைப் போன்று இரு, நாம் சொல்லுவதனை பேசு இல்லாவிட்டால் உன்னை பிடித்துக் கொடுப்போம் என சரத் பொன்சேகாவை ரணில் மிரட்டுவதாக ய் நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018