கூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரே நேற்று நள்ளிரவில் கூட்டு அரசில் இருந்து விலகியுள்ளனர்.

புத்தாண்டுக்குப் பின்னர், கூடும் நாடாளுமன்றத்தில் தாம் எதிரணி வரிசையில் அமரவுள்ளதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்தனர். அதனை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டார் என்று  அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவாக எதிரணியில் தாம் அமரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தனியான அணியாகவே தாம் இயங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திசநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா, சுமேதா ஜெயசேன, சுசந்த புஞ்சி நிலமே, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தயாசிறி ஜெயசேகர, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, ஜோன் செனிவிரத்ன, ரி.பி.எக்கநாயக்க, தாரநாத் பஸ்நாயக்க, அனுராத ஜெயரத்ன  ஆகிய 16 பேருமே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018