ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது.  1ஆம் திக­தியே  மே தினத்தை நடத்­துவோம்  எனவும் யாழ்ப்­பா­ணத்தில்  மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று    ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார். 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர்  அங்கு மேலும் கூறு­கையில், 

மே தினத்தை 7 ஆம் திகதி கொண்­டா­டு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்­மதி வார­மாக உள்­ள­மை­யினால் இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­த­தாக கார­ணமும் கூறி­யுள்­ளனர்.

எவ்­வாறிருப்­பினும் வெசாக் வாரம் என்ற கார­ணத்­தினால் மே தினத்தை தடுக்க எவ­ருக்கும் உரிமை இல்லை. கொழும்பில் வெசாக் வாரத்தை  மக்கள் கொண்­டாடும் கார­ணத்­தினால் எம்மால் மக்­க­ளுக்கு இடைஞ்­ச­லாக செயற்­பட முடி­யாது. 

இம்­முறை ஜே.வி.பி. யின் மே தினக் கூட்­டத்தில் வழ­மையை விடவும் மக்கள் அதி­க­மாக கலந்­து­கொள்­வார்கள். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து  வரு­கின்றோம்.

எனினும் கொழும்பில் பாரிய மே தினக் கூட்­டத்தை நடத்­து­வ­தனால் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­படும். மாநா­யக்க தேரர்­களும் எமக்கு இந்த கார­ணங்­களை தெளிவுபடுத்­தினர். ஆகவே மாநா­யக்க தேரர்­களின் கோரிக்­கையை நாம் மீற­வில்லை. மே தினத்­தன்று ஜே.வி.பி. யின் தொழி­லாளர் உரி­மைக்­கான மே தினக் கூட்டம் கட்­டாயம் இடம்­பெறும்.

 மே மாதம் முதலாம் திகதி எமது மே தினக் கூட்­டத்தை யாழ்ப்­ப­ாணத்தில்  நடத்­து­கின்றோம். எமது தொழிற்­சங்­கங்கள், சிவில் அமைப்­புகள் மற்றும் பிர­தி­நி­திகள் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு யாழ்ப்­ப­ாணத்தில் எமது மே தினத்தை நடத்­துவோம். 7 ஆம் திகதி கொழும்பில் எமது மே தினக்­கூட்டம் வழ­மை­போ­லவே இடம்­பெறும். இம்­முறை   பொரளை  சந்­தியில் ஆரம்­ப­மாகும் எமது பேரணி கிரு­லப்­பனை பி.ஆர்.சி. மைதா­னத்தில் மே தினக்கூட்­டத்­துடன் நிறை­வ­டையும். 

தற்­போது நாட்டில் தொழில் வர்க்­கத்­தினர் பாரிய நெருக்­க­டி­யினை சந்­தித்­துள்ள நிலையில் எமது சாதா­ரண வர்க்க மக்­க­ளுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வரி சுமையில் மக்கள் நெருக்­கப்­பட்­டுள்­ளனர். பொரு­ளா­தார ரீதியில் ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டுகள் எவையும் இல்­லாது போயுள்­ளன. வேலை­வாய்ப்­புகள் இல்­லாது எமது இளை­ஞர்கள் தவிக்­கின்­றனர்.

மனித உரிமை மிகப்­பெ­ரிய கேள்­வி­யாக மாறியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் எமது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார். 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018