தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!!


காலி மாநகர சபையின் முதலாவது அமர்வு மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் இன்று ஆரம்பமாகியது.

சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் காலி மாநகர சபையின் முதலமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது.

முதலாவது அமர்வின் மங்கள நிகழ்வில் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இடம்பெற்றதால் அதனை தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எம்.எவ். ரிஹானா தெரிவித்தார்.

தமிழ் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது என்று கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. அமைதியின்மையும் தோன்றியது.

மாநகர சபை உறுப்பினர் ரிஹானாவின் கோரிக்கையை நியாயப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான பி.எல்.தேசப்பிரிய, உடனடியாக மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்தார்.

குழப்பத்துக்கு மத்தியில் இவரது உரை காரணமாக சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.பெரும் அமைதியின்மைக்கு மத்தியில் கருத்து மோதல்களும் சபையில் எழுந்தன.

அதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மாநகர மேயர் அறிவித்தார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018