பத்தாயிரம் பாடசாலைகளை மூடுகிறது சவுதி அரேபியா!

நாட்டில் இயங்கும் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளை அடுத்த கல்வியாண்டில் மூடுவதற்கு சவுதி அரேபியாவின் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை ‘த நிவ் கலீஜ்’ எனும் சவுதி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் சவூதி கல்வியமைச்சு நாட்டில் இயங்கும் பாடசாலைகள் பற்றிய கணிப்பீடொன்றை மேற்கொண்டது.

அதில் அநேகமான பாடசாலைகள் 20 மாணவர்களுடனும், 6 ஆசிரியர்களுடனும் இயங்குவது கண்டறியப்பட்டது.

இவற்றைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் 2 இலட்சம் சவுதி ரியால்கள் செலவாகின்றன.

அதேவேளை, நாட்டிலுள்ள 24 ஆயிரம் அரச பாடசாலைகளில் 9ஆயிரத்து 553 பாடசாலைகளில் 100 க்கும் குறைவான மாணவர்களே கற்கின்றனர்.

இந்தப் பாடசாலைகளை அடுத்த வருடம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கே அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018