சம்பந்தனின் பதவிக்கு போட்டி ;விளக்கமளித்த ராஜித்த சேனாரத்ன

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியை சந்தித்தாலும் எதிர்கட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியை சந்திக்கப்போவதில்லை என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை  தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளதோடு தேசிய அரசாங்கத்திலிருந்தும் விலகிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 16 பேரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

குறித்த 16 பேரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணையும் பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

ஆகையினால் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதன் நிமித்தம் இரா சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரிதொரு கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றில் தெரிவாகியதன் பின்னர், கட்சி தாவல்களினூடாக பிரிதொரு கட்சியில் இணைந்துக்கொள்வதன் மூலம் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதககலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018