எதிர்க்கட்சித்தலைவர் விவகாரம்! வியாழனன்று கலவரமாகவுள்ள சபை?

எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கான போட்டித் தன்மை அதிகரித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 பேரும் தனித்தனியே சபாநாயகரை வலியுறுத்தவுள்ளனர்.

அதேபோன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் புதுவருடத்துக்கான முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அரசிலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கோரவுள்ளனர்.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளனர். மறுபுறம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்துக் கொண்டு அரச சார்பான கொள்கையில் செய்ற்படுதல் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அமைதி காத்து வருவதே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரக் காரணம் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த எதிர்க்கட்சி அந்தஸ்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என்பதை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் முன்வைக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்னுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் குழப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018