இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம்

சிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாதின் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை அந்நாட்டின் சிவில் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிகி ஹேலி ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளின் கூட்டுப்படை டமஸ்கஸ் நகரிலுள்ள இரசாயன ஆயுத தளங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் என்பவற்றை மேற்கொண்டது. இதனையடுத்து சிரியா அரசாங்கத்தின் நட்பு நாடான ரஷ்யா, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை உடன் கூட்டுமாறு நேற்று (14) அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இதனையடுத்து நேற்று (14) கூட்டப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்க தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிரியாவின் இரசாயன ஆயுத நடவடிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டதாகவே தாம் கருதுகின்றோம். நாம் இந்த அழுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவோம் எனவும் நிகி ஹேலி கூறியுள்ளார்.

சிரியாவின் அரசாங்க படையினர் எமது சக்தியையும் பலத்தையும் விளங்கிக் கொள்வதில் முட்டாள்களாக இருக்குமாயின், நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விடவும் கூடிய அழுத்தத்தை வழங்க நாம் தயாராகவுள்ளோம் எனவும் நிகி ஹேலி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரியா அரசாங்க படை மீண்டும் ஒரு முறை இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அமெரிக்கா உடன் தாக்குதலை நடாத்தும் எனவும் நிகி ஹேலி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மேலும் அறிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018