ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்

ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் 15-04-2017 இன்றாகும். ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார் அவரின் 12ஆம்ஆண்டு நினைவு நாள் இன்று.மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வளங்கி கௌரவிக்கபட்டது.

இவரின் தாய் மண்ணின பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் இன்றும் தமிழர் மனங்களிலும் என்றும் நிலைத்து நிக்கின்றன சில கவிஞர்கள் வெறும் ஏட்டுக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட வேண்டும் என நினைப்பார்கள். போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துஇ பேச்சுஇ ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்இ கரும்புலி காவியம்இ இனிமைத் தமிழ் எமதுஇ ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட வலியும் பழியும் என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார்.அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும்இ அதன் பின்னர் கவியம் நூல் உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார்.

இம்மண்ணில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இவரும் தன் பேனாமுனையால் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை எழுதத் தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த விடுதலையின் சுவாலையை மூசி எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார்.

எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர். போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்.

அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார். அத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார்.ஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார்.

எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த சூசைநாயகம் கிங்சிலி உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார். அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.

இவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார். இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி ஆழிப்பேரலையின் சுவடுகள் என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவிற்குள் கொண்டுவரத்துடிக்கும் இவரின் இழப்பு பேரிழப்பாகும்.காலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன். அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள்.

பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர் கவிஞர். மாமனிதர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன் (சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார்

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019