படகு தீக்கிரை; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது சந்தேகம்

மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினருக்குச் சொந்தமான படகு மற்றும் வலைகள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியனரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வாகரை பனிச்சங்கேணி கடற்கரைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 20 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி கொண்ட பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையில் முதல் நாள் அமர்வில் தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு ஆதரவு தரும்படி தன்னிடம் கோரியதாகவும் தனது தலைமையின் கட்டளையின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தனது ஆதரவை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தான் பல்வேறு விதத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதன் ஒரு பகுதியாகவே இந்த படகு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வாகரை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கான நீதியை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018