சர்வதேச நெருக்கடிகளே தமிழர்களுக்கு தீர்வைக் கொடுக்கும்: கஜேந்திரன்

சிங்களவர்கள் தாமாக முன்வந்து தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க மாட்டார்கள். சர்வதேசத்தின் நெருக்கடி ஊடாகவே அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில்  (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நேற்று கண்ணீருடன் புதுவருடத்தைக் கழிக்க, ஜனாதிபதி மைத்திரியோ தமது சுற்றத்துடன் மகிழ்ச்சியாக புதுவருடத்தைக் கொண்டாடினார். இதன் மூலம் ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளையும் மைத்திரி ஏமாற்றிவிட்டார் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தொடர்ச்சியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும், அச்சட்டம் நீக்கப்பட்டால் அதன் கீழ் தடுத்து வைத்துள்ளவர்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்றும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018