ஜ.தே.கவின் பங்காளியா கூட்டமைப்பு: வாய்மூடிய மனோ!

ஜக்கிய தேசிய கட்சி பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை விரும்புவதில்லை என கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேன், அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும். என ஜக்கிய தேசிய கட்சி விரும்புகின்றதெனவும் இலங்கை அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நான் இந்த உண்மையை கூறுவதற்கு அச்சப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் ந டந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறதெனவும் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

பின்னர் நான் அமைச்சர் மங்களவுட ன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல.சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினேன்.அவ்வாறு பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி எப்போதும் விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள் என்றார்.

அவ்வாறாயின் கூட்டமைப்பு ஜக்கிய தேசியகட்சிக்கு சாதாகமான கட்சியாவென எழுப்ப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்க மனோகணேசன் மறுத்துவிட்டார். 

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018