4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வி

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இதில் சென்னை, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 8 வது ஓவரில் 96 ரன்களை குவித்த இந்த ஜோடி ஹர்பஜன் பந்து வீச்சில் பிரிந்தது.

லோகேஷ் ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் சுழல் பந்து வீச்சில் பிராவோ விடம் கேட்ச ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சற்று அதிரடி ஆட்டத்தில் ஈடுபட பஞ்சாப் அணியின் ரன் வேகம் எகிறியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் 2 வது ஓவரில் ஷேன் வாட்சன் (11 ரன்கள்) மோகித் சர்மா பந்து வீச்சில் பரிந்தெரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறிது நேரத்தில் முரளி விஜயும் (12 ரன்கள்) வெளியேற 5 ஓவர்களில் சென்னை அணியின் ஸ்கோர் 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளாக இருந்தது. பின்னர் 6 வது ஓவரை வீசிய அஸ்வின், பில்லிங்ஸை எல்பிடபுள்யூ ஆக்கி வெளியேற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ராயுடு வுடன் கை கோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 49 ரன்கள் எடுத்திருந்த அம்பதி ராயுடு 13 வது ஒவரின் 4 வது பந்தில் ரன் அவுட் ஆகி தனது அரை சதத்தை தவற விட்டார். பின்னர் தோனியுடன் ஜடேஜா இணைந்தார். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த நிலையில் 17 வது ஓவரின் 5 வது பந்தில் தோனி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

18 வது ஓவரின் 2 வது பந்தில் ஜடேஜா, ஆன்ட்ரூ டை பந்து வீச்சில் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து ஆடிய தோனி அதே ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா பந்து வீச வந்தார்.

மிகவும் அற்புதமாக பந்து வீசிய மோகித் சர்மா கடைசி ஓவரில் 13 ரன்களே விட்டு கொடுக்க சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியின் தரப்பில் ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிருந்தனர். 

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஈடன் கார்டென்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018