சினிமா ஸ்டிரைக்கால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு, விரைவு நடவடிக்கை தேவை - அரவிந்த் சாமி

நீண்டகால காத்திருப்பு சோர்வடைய வைக்கிறது என்றும், போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், விரைவான தீர்மானங்களை கொண்டுவர வேண்டும் என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

மார்ச் 1-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த ஸ்டிரைக் காரணமாக, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

இதனால் சினிமா துறையே முடங்கி கிடக்கிறது. புதிய படங்கள் திரைக்கு வராததால் சினிமா தியேட்டர்களில் கூட்டம் இல்லை. சினிமாவை நம்பி இருக்கும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, டிஜிட்டல் முறையில் குறைந்த கட்டணத்தில் படங்களை திரையிடுவதற்கான ஏற்பாடு களில் தயாரிப்பாளர் சங்கம் இறங்கியது. இதில் 2 புதிய நிறுவனங்களுடன் நடிகர் சங்கம் ஒப்பந்தம் செய்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு சார்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

`நீண்டகால சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன். மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போராட்டத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பது எனக்கு தெரியாது. அனைவருமே விரைவில் பணிக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே விரைவான தீர்மானங்களை கொண்டுவர வேண்டும்.'

இவ்வாறு கூறியிருக்கிறார். 

Ninaivil

திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018