கனடாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிக்கை!

கனடா நாட்டின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் கோரிக்கை மனு ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த மனுவை ஒட்டாவா – கால்ற்ரன்-மிசுசுப்பிமில்ஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜக் மக்கிளரன் அவர்கள் கொண்டுவந்தார். கோரிக்கை சமர்ப்பிப்பு, கேள்விபதில், அறிக்கை சமர்ப்பிப்பு, ஊடகசந்திப்பு என நான்கு அமர்வுகள் நடைபெற்றது. நாடாளுமன்றத்தினுள் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம். மதியம் 11 மணி அளவில் பேரவைத்;தலைவர் (சபாநாயகர்) மாண்புமிகு டேவ் லீவக் அவர்கள் அவை உறுப்பினர் மாண்புமிகு திரு. ஜக் மக்கிளரண் அவர்களது கோரிக்கையை வாசிக்குமாறு அழைத்தார்.

ஜக் மக்கிளரண் கோரிக்கை:

‘விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற தடையை நீக்கவேண்டும்! இந்த

அவையின் கருத்தாக இதை முன்வைக்கின்றேன். 2006ஆம் ஆண்டு கனடிய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற தடைப் பட்டியலில் போட்டது. 2009ஆண்டுடன் முடிவுக்கு வந்த போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து போனது. அவர்கள் மீண்டெழுந்து ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதில்லை. எனவே இந்தத் தடையைக் கனடிய அரசு நீக்கவேண்டும்.

அவைத்தலைவர்: மக்கிளரன் கேள்வி ஏதாவது இருந்தால் இப்போது கேட்கலாம்

மக்கிளரண்: குடிவரவு அமைச்சருக்குக் கேள்வி. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆயுதம் தாங்கிய இராணுவமாக ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் ஒரு வலுவான போராட்ட இயக்கம். கனடிய அரசு 2006 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மீது ‘பயங்கரவாத இயக்கம்’ என தடை விதித்தது. இலங்கையில் போர் 2009 உடன் முடிவடைந்துவிட்டது. ‘பயங்கரவாத முத்திரை இனித் தேவையற்றது’ அமைச்சரே! ஆகையால் விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடிய அரசு நீக்கவேண்டும் எனக் கோரும் தமிழ்க் கனடியர்களின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பீர்களா?

குடிவரவு அமைச்சர் லோறா அல்பான்ஸ்: தமிழர்கள் கொடும் வேதனையையும் வலியையும் அனுபவித்து வருகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம்……..

(என ஒரு நழுவலான பதிலைக் கொடுத்தார்)

மீண்டும் பதில் கேள்வி தொடுத்தார் ஜக் மக்கிளரன்:

அமைச்சரே! ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற பட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. இது தமிழ் மக்களின் மீது படிந்த கறை. ‘பயங்கரவாத பட்டம்’ கனடா வாழ் தமிழ்ச் சமூகத்தை ஒரு தலைகுனிவுக்கு ஆளாக்குகிறது. தமிழ்மக்கள் தாம் போரில் இழந்த போராளிகளை நினைவுகொள்ளும் நிகழ்வை ‘மாவீரர் நாள்’ என ஒவ்வொரு நவம்பர் 27ஆம் நாளும் நினைவுகொள்கின்றனர்.

இந்த நிகழ்வுக்குக் கூட இந்தத் தடை ஒரு இடைஞ்சலாக உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது இல்லை. அவர்கள் இனி ஒருபோதும் போராடும் சக்தியாக வருவதற்கு வாய்ப்பு இல்லை.

அமைச்சரே, நானும் கனடியத் தமிழ்த் தலைவர்களும் நாடாளுமன்றம் சென்று கனடிய அரசை விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும்படி கோரப் போகின்றோம். அமைச்சரே! நீங்கள் எங்களுடன் வருவீர்களா?

குடிவரவு அமைச்சர் லோறா அல்பான்ஸ்: (நேரடியாகப் பதில் எதனையும் அமைச்சர் சொல்லவில்லை….) மாறாக நாங்கள் இலங்கையின் வடக்கு மாகாண முதல் அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறோம்…. போன்ற

திசைதிருப்பும் கதைகளைச் சொல்லி அமர்ந்தார்.

ஒரு மணியளவில் அவையில் ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் அறிக்கையை படிக்க அழைத்தார் பேரவைத் தலைவர் மாண்புமிகு டேவ் லீவக்.

மாண்புமிகு டேவ் லீவக்: நீங்கள் காலை கொண்டுவந்த தீர்மானத்தின் அறிக்கையை இப்போது படிக்கலாம்.

ஜக் மக்கிளரண்:

இலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பாதுகாக்க ராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) உருவாக்கினர். 1983ல் உள்நாட்டு யுத்தம்

தொடங்கியது. புலிகள் படை ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.

2006ல் கனேடிய அரசாங்கம், இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு ‘பயங்கரவாதப் பட்டியலில் தமிழ்ப் புலிகளைச் சேர்த்தது. இந்த விளைவு தமிழ் மக்களை இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது.

உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுதப்போரை கை விட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை. எனவே ‘பயங்கரவாதப் பட்டியலில்’ இனி வைத்திருக்கத் தேவையில்லை.

ஆனால் ‘தமிழ்ப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் கனடிய அரசு’ இன்னமும் வைத்திருப்பதானது  கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேலாக தொங்கும் கருப்பு மேகம் போன்றது. அவர்களை இந்தத் தடை இரண்டாம் தர குடிமக்களாக அவமதிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தாயகத்தில் போரில் உயிர்  நீத்த உறவினர்களையும் தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூர்வதையும் மற்றும் அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் ஒழுங்கு செய்வதையும் தடுக்கிறது.

கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் எனும் நலன் கருதி, ‘பயங்கரவாதப் பட்டியலில் இருந்து’ தமிழீழ விடுதலைப் புலிகளை கனடா அரசு அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறாகப் பேரவையில் தனது அறிக்கையினைப் படித்தார் திரு. மக்கிளரண்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஊடகவியலாளர் கூடத்தில் ஊடகங்களுக்குச் செவ்வி அளித்தார் திரு. ஜக் மக்கிளரண் அவர்கள். அவருடன் தமிழர்கள் சார்பில் திரு. திருமுருகவேந்தன் அவர்களும் உடன் இருந்தார். ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நாங்கள் ஆயிரம் படிகள் ஏறவேண்டி இருக்கும். நாங்கள் இன்று அப்படிகளில் ஏறும் முயற்சியில் சிறிது முன்னேறி இருக்கின்றோம். இன்று நாங்கள் ஏறி இருக்கும் படிகள் சிலவாயினும் முயற்சியைத் தொடங்கி விட்டோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான ‘பயங்கரவாதக் கறையைத்’ துடைத்தழித்து அவர்கள் தமிழீழ மக்களை நெஞ்சார நேசிக்கும் விடுதலை வீரர்கள், தமிழினத்தின் பாதுகாப்பு படை என்ற உண்மையை

உணர்த்தவேண்டும்’ என்றார் அவர்.

இந்தத் தடை கனடா வாழ் தமிழர்களை அச்சுறுத்தும் ஒரு ஆயுதமாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருந்து வருகிறது. இதனால் தமிழர்கள் ஒரு இரண்டாம் தரக் குடிகள்போல் நடத்தும் நிலமை ஏற்படுகின்றது. அதனால் இந்தத் தடையை உடனடியாக நீக்கவேண்டும் என நாடாளுமன்றத்தைக் கேட்கிறேன் என்றார் ஜக் மக்கிளரண்.

திருமுருகவேந்தன் அவர்கள் பேசும்போது: இன்றைக்கு தமிழர்களுடைய வரலாற்றில் முக்கியமான நாள். எங்கள் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழினத்தின் விடிவுக்காகப் போராடிய தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற கருந்திரையை நீக்க கோரிக்கை மனு ஒன்று ஒன்ராரியோ

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நாள். அந்தக் கோரிக்கையைக் கொண்டுவந்த ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு மிகு ஜக் மக்கிளரண் அவர்களுக்கு உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

நிருபர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜக் மக்கிளரண்:

குடிவரவு அமைச்சர் லோறா அல்பனீஸ் அவர்கள் சாதகமான பதில் எதனையும் தரமாட்டார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்ததுதான். அவர்களை நம்பி நான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவுமில்லை. அடுத்த கட்டம் நாடாளுமன்றம் செல்வது என்ற திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

சிங்கள ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழினத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் தமிழினத்தின் ஆயுதம் தாங்கிய இராணுவம். அவர்கள் மீது குத்தப்பட்ட ‘பயங்கரவாத முத்திரை’ என்பது கனடியத் தமிழினத்தின் இயலாமையின் அடையாளம்.

அதனைத் துடைத்தெறியும் முயற்சி வரவேற்கப்படவேண்டியது. இவ்வேளையில் இம்முயற்சி வெற்றிபெறாமல் போகலாம்…. ஆனால் இந்தத் தடையை எதிர்த்து நின்றோம் என்ற நாடாளுமன்ற பதிவு என்றென்றும் வரலாற்றில் நிலை கொள்ளும். நம் அடுத்த சந்ததி நம்மைவிட பலமாக இருக்கும். அவர்கள் உலகையும் கனடாவையும் கட்டியாளக் கூடும். அவ்வேளை கனடிய அரசு தடைபோட்டதற்கு மன்னிப்பும்கோரி அதனை நீக்கலாம்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018