தெருவோரம் இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த சச்சின்..!

மும்பையில் தெருவோரம் இளைஞர்களோடு இளைஞராக கிரிக்கெட் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்தியா முழுவதும் ஆண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் கோடை விடுமுறை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் ஐ.பி.எல். போட்டிகள் முடிவடைந்ததும் தெருவோரம் கிரிக்கொட் ஆடிய இளைஞர்களோடு சச்சினும் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்துள்ளார்.

சமீபத்தில் சச்சின் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டுள்ளார். உடனே காரிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை சச்சினின் பள்ளி நண்பரும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இறுதியாக சச்சினுடன் விளையாடிய இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சச்சினின் ஆட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த ரசிகர்கள் பலரும் வினோத் காம்ப்ளிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019