தந்தைக்காக சண்டை போட கவலைப்பட மாட்டேன் : சாய்னா நெஹ்வால் விளக்கம்

‘‘எந்த இடத்திலும் தந்தைக்காக சண்டை போடுவதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்’’ என சாய்னா நெஹ்வால் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் நடந்து முடிந்த 21வது காமன்வெல்த் விளையாட்டில் பேட்மின்டன் குழு பிரிவு மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்றார் சாய்னா நெஹ்வால். இதன் மூலம் காமன்வெல்த் பேட்மின்டனில் 2 தங்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக, காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் தனது தந்தை ஹர்விர் சிங் நெஹ்வாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த சாய்னா, ‘நான் போட்டியில் விளையாட மாட்டேன்’ என இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியது கடும் சர்ச்சையானது. பின்னர் மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட்டு, சாய்னாவின் தந்தைக்கு அங்கீகார அட்டையை வழங்கி பிரச்னையை தீர்தது வைத்தது.

இது குறித்து தற்போது சாய்னா அளித்திருக்கும் விளக்கத்தில், ‘‘என் தந்தைக்காக ஓட்டலில் அறையை முன்பதிவு செய்ய கட்டணத்தை செலுத்தியிருந்தேன். ஆனால், அங்கீகார அட்டை இல்லாததால், நீண்ட தூர பயணத்திற்கு பிறகும் அவர் 2 நாள் , விளையாட்டு கிராமத்திற்குள் நுழைய முடியாமல் தவித்தார். அந்த 2 நாளும் என்னால் அரை மணி நேரம் கூட தூங்க முடியவில்லை. அதே டென்ஷனுடன் எப்படி விளையாட முடியும். இன்று நான் பதக்கம் வென்று விட்டதால், இப்பிரச்னை பெரிதாகவில்லை.

இதே நான் தோல்வி அடைந்திருந்தால் நிலைமையே வேறு. ஆனாலும், எந்த இடத்திலும் என் தந்தைக்காக சண்டை போடுவதை பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தைக்கு பிறகு தான் எல்லாம்’’ என கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018