இந்து கோயில்களுக்கு மானிய விலையில் சாமி சிலைகளை வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்து கோயில்களுக்கு மானிய விலையில் சாமி சிலைகள், திருக்குடைகள் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்மத்தை பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி இந்து கோயில்களை கட்டுவோருக்கு மானிய விலையில் சாமி கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், திருக்குடைகள் உள்ளிட்டவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இதனை பெற விரும்புவோர் திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல் மற்றும் பஞ்சலோக சாமி சிலைகளின் விலை, அவற்றின் உயரம், எடையை பொருத்து மாறுப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு கற்சிலைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு 75% மனிய விலையில் கற்சிலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பஞ்சலோக சிலைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு 90% மனிய விலையிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு 75% மனிய விலையிலும் விற்கப்படுகிறது. இதேபோல் இந்து கோயில்களுக்கு தேவைப்படும் மைக்செட், திருக்குடைகள் உள்ளிட்டவையும் மானிய விலையில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019