உள்நாட்டு விவகாரங்களை வெளியே பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம்

உள்நாட்டு விவகாரங்களை வெளியே பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்தியாவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து லண்டனில் பேசி இருக்கிறார். மேலும் ஜப்பானில் கருப்பு பணம் மற்றும் ஊழல்கள் குறித்தும் பேசி உள்ளார்.

இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் வேறொரு நாட்டில் தனது நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசுவது சரியா?. இந்தியா குறித்து ஊழல் மற்றும் கற்பழிப்பு நிறைந்த ஒரு பிம்பத்தை எதற்காக வெளிநாடுகளில் ஏற்படுத்த வேண்டும்.

உங்களுக்கு (பிரதமர் மோடிக்கு) வேண்டுமானால் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தினர் மீது முன்விரோதம் இருக்கலாம். அதற்காக வெளிநாடுகளில் வைத்து நாட்டு நடப்புகளை பேசுவது முறையாகாது. வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா இங்கிலாந்தில்தான் பத்திரமாக உள்ளார். பிரதமர் மோடி இது போன்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018