கோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியமைப்பதற்கு அழைக்கும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, ஆட்சியமைப்பதற்கான கனவு காண்பதை விடவும் வெலிக்கடை சிறையின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் சிறந்தது என்றும் சரத் பொன்சேகா கூறினார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பிராந்திய அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு மற்றும் புதுவருட நிகழ்வு கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் நடைபெற்றது.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுவரும் தகவல்கள் தொடர்பாக தெரிவித்தார்.

“போர்க் காலத்தில் நாங்கள் அர்ப்பணித்து போரில் ஈடுபட்டபோது போர் நிலத்தில் எமது இரத்தத்தை சிந்திய தருணத்தில் நாட்டிலிருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தலைமறைவாகியிருந்த ஒருவருக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்குமாறு அழைப்பு விடுப்பவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு பிரம்பில்தான் தண்டிக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கையில் எடுப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தவர்களே அவர்கள்” என்றார்.

இதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சியை அமைப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

 “ஆம். எமக்கு இருந்த பலம் அப்படியே இருக்கிறது. நாங்கள் பயணிக்கின்ற வழியை பிரபல கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தீர்மானம் மிக்க தருணத்தில் அவர்களது பலத்தையும் எமக்கு அளித்து பலத்தை அதிகரித்தார்கள். எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சி அமைக்க முடியும். அதில் பிரச்சினையில்லை. ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கால்களை கீழே பிடித்து இழுப்பவர்கள் தான் இருக்கின்ற பெரிய பிரச்சினையாகும்” என்று தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடாக மிக விரைவில் ஆட்சியை அமைப்பதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பெசில் ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றும் கனவு காண்பதை விடவும் வெலிக்கடை சிறையின் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தை அவர் உருவாக்கினால் சாலவும் சிறந்தது என்று நான் நினைக்கின்றேன். அவர்களது பயணம் செல்லும் பாதையின் அமைப்பு அப்படியிருக்கிறது என்று தெரிவித்தார்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019