கச்சதீவு அந்தோனியார் திருவிழா;இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு

ஆண்டுதோறும் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்றதுடன்   முதல் தடவையாக இந்திய மீனவர்களின் பங்குபற்றல் இன்றி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து  600 பக்தர்கள்  கச்சதீவு அந்தோனியார் ஆலாய திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்

வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று திருப்பலி ஒப்புக் கொடுத்தலுடன் நிறைவுக்கு வந்தது.

புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவில் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரத்தினம் யோசவதாஸ் தலைமையில் நடைபெற்றதுடன் அருட்தந்தை நேசன், அருட்தந்தை ஜோஜின், அருட்தந்தை டேவிட், அருட்தந்தை மங்கலம் ஆகியோரினால் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட அருட்தந்தையர் மற்றும் அருட் சகோதரிகள் பங்கேற்றிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் மேற்கொண்டிருந்தார்.

 திருப்பலி நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுனரத்ன, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ் சேனாரத்ன, வடமாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட், யாழ் அரச அதிபர் நா.வேதநாயகன்  உள்ளிட்ட பிரகமுகர்களும் கலந்துகொண்டனர்.

திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகளை இலங்கை கடற்படையினரும் சிவில் பாதுகாப்பை பொலிஸாரும் வழங்கியிருந்தனர்.

பக்தர்களுக்கான உதவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையும் மருத்துவ சேவைகளையும் பாதுகாப்பு தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையில் நெடுந்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் மீனவர்களும் தெற்கின் சிங்கள மக்களும் கலந்துகொண்டனர். இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து  600 பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ளவதை புறக்கணித்துள்ளனர்

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar