இலங்கை சிரேஷ்ட மகளிர் ஹொக்கி அணி உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்பு

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் எதிர்வரும் ஜுலை 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள Exin Masters World Cup போட்டியில் முதன் முறையாக இலங்கை சிரேஷ்ட மகளிர் ஹொக்கி அணி பங்கேற்கிறது.

உலகெங்கிலுமிருந்து சிரேஷ்ட தேசிய அணிகள் கலந்துகொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்ற ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டி Exin Masters World Cup ஆகும். 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சிரேஷ்ட வீரர்கள் ஹொக்கி சங்கம் (MHA) இதனை ஏற்பாடு செய்து, ஊக்குவித்து வருவதுடன், சர்வதேச ஹொக்கி சங்கத்தால் (FIH) உலகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் உலகெங்கிலுமிருந்து அணிகள் கலந்துகொள்கின்ற இத்தகைய பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் உலகெங்கிலுமிருந்து அணிகள் கலந்து கொள்கின்றன. தனித்துவமான ஒன்றாகவும், உலகின் மிகப் பாரிய நிகழ்வாகவும் Exin Masters World Cup திகழ்ந்து வருகின்றது.

35 வயதிற்கு மேற்பட்ட வயதுப் பிரிவில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை சிரேஷ்ட பெண்கள் அணி, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கானா, அமெரிக்கா மற்றும் போட்டியை நடாத்துகின்ற ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வலுவான அணிகளுக்கு எதிராகப் போட்டியிடவுள்ளது. தேசிய ஹொக்கி அணிக்கு 5 தடவைகள் தலைமை தாங்கியுள்ள முன்னாள் தேசிய ஹொக்கி தலைவியான சோபிதா மெண்டிஸ் அணிக்குத் தலைமைதாங்கவுள்ளதுடன் முன்னாள் தேசிய ஹொக்கி தலைவரான எம். ஜி. எம். நளீம் பயிற்றுவிப்பாளராகச் செயற்படுகிறார்.

“முதன் முறையாக Exin Masters World Cup போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையிட்டு நாம் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்” என்று இலங்கை சிரேஷ்ட மகளிர் தேசிய ஹொக்கி அணியின் தலைவியான சோபிதா மெண்டிஸ் குறிப்பிட்டார். “கடந்த காலங்களில் இலங்கைக்கு வெற்றியையும் புகழையும் ஈட்டித்தந்துள்ள அனுபவம் வாய்ந்த முதனிலை வீரர்கள் எமது அணியில் இடம்பெற்றுள்ளனர். எம்மால் முடிந்த அளவுக்கு எமது திறமைகளை வெளிப்படுத்தி இம்முறை எமது தாய்நாட்டுக்கு வெற்றியை ஈடடித்தருவதற்கு நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை முதுநிலை மகளிர் தேசிய ஹொக்கி சங்கத்தின் (SLMWNHA) அயராத உழைப்பு மற்றும் தொடர்ச்சியான செல்வாக்கு ஆகியனவே இந்த அணி உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் கனவை நனவாக்க உதவியுள்ளன. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையின் கீழ் முன்னாள் தேசிய ஹொக்கி அணி வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான குழுவினரால் இச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இது ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நிறைவேற்று அதிகார உறுப்பினர்கள் சபைக்கு அமைச்சர் தனது வழிகாட்டலை வழங்கி வந்துள்ளார்.

“முன்னாள் தேசிய ஹொக்கி வீரர்களின் நலனைப் பேணி அவர்கள் தனது திறமைகளை சர்வதேச அளவில் காண்பிப்பதற்கு வாய்ப்பளிப்பதே எமது பிரதான நோக்கமாகும்: என்று SLMWNHA இன் செயலாளரான ருவைஸா சீலா குறிப்பிட்டார். “உலகக் கிண்ணத்தில் எமது அணி பங்குபற்றுவது எமக்கு மேலும் பல வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும் என நாம் திடமாக நம்புகின்றோம்” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணப் போட்டியில் நுழையும் இத்தருணத்தில் அணிக்கு அனுசரணை வழங்குவதற்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நாமங்களின் ஒத்துழைப்பை சங்கம் தற்போது தேடி வருகின்றது.

அனுசரணைத் திட்டங்கள் மற்றும் நேர்காணல்கள் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களுக்கு srilanka40mastareswomen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக SLMWNHA இனை தயவு செய்து தொடர்பு கொள்ளவும். அத்துடன் செய்தியாளர் மாநாட்டில் சங்கத்தின் புதிய இணையத்தளம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018