அஸ்வினால் ப்ரீத்தி ஜிந்தா - சேவாக் இடையே வார்த்தை மோதல்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் சேவாக்கிடம் ப்ரீத்தி ஜிந்தா மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் அதிரடியால் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் உள்ள நான்கு போட்டியில் இரண்டில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடத்திற்குள் முன்னேறிவிடும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 10 ஆட்டத்தில் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 1 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் கருண் நாயர், மனோஜ் திவாரி, நாத் போன்றோர் முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அஸ்வின் களம் இறக்கப்பட்டார். 2 பந்தை மட்டுமே சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேஎல் ராகுல் 70 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

அஸ்வினை 3-வது இடத்தில் களம் இறக்க ஆலோசகரான சேவாக்குதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா போட்டி முடிந்த பிறகு சேவாக் உடன் வார்த்தை போரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஆடும் லெவன் அணியில் தலையிட்டு தோல்விக்கு காரணமாக இருந்ததாக ப்ரீத்தி குற்றம்சாட்டியதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019