மாட்ரிட் டென்னிஸ்- நடால் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் ரபெல் நடால் 7-ம் நிலை வீரரான டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார்.

இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு ஆடுகளத்தில் தொடர்ச்சியாக அதிக செட்டுகளை வென்றவர் என்ற சிறப்பை நடால் பெற்றார்.

இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜான்மெக்கன்ரோ தரைவிரிப்பு ஆடுகளத்தில் (கார்பெட்) தொடர்ந்து 49 செட்டுகளை வென்றதே சாதனையாக இருந்தது. அவரது 34 ஆண்டு கால சாதனையை நடால் முறியடித்து இருக்கிறார்.

நடால் நேற்று கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். இதில் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019