கல்முனை யங் பேர்ட்ஸ் கழகம் சம்பியன்

கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.

சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் (13) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடவிருந்தனர். இருந்தபோதிலும் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக்கழகம் போட்டி விதிமுறைகளை மீறியதனால் இவ்விறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணியாக கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நடைபெறவிருந்த தினம் கண்காட்சி கடின பந்து கிரிக்கெட் போட்டியாக கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த வீரர்களை உள்ளடக்கி பெஸ்ட் ஒப் த பெஸ்ட் குழுவினருக்கும் சம்பியன் கிண்ணத்தைப் பெற்ற கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்குமிடையில் நடைபெற்றது.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி. சத்தார், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார், எம்.ஐ.எம். அப்துல் மனாப், பிர்லியன்ட் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம். பழீல், அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அமீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சிப் போட்டியானது 16 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் 16 மேலதிக ஓட்டங்களால் பெஸ்ட் ஒப் த பெஸ்ட் குழுவினர் வெற்றிபெற்றனர்.

சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண சுற்றுப்போட்டியின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக் கழக வீரர் எம்.என்.எம். ஜெசாரும், சகலதுறை ஆட்டக்காரருக்கான விருதை கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எச்.எம். றிகாசும், பெறுமதியான விளையாட்டு வீரருக்கான விருதை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழக வீரர் எம்.எஸ். சிப்லியும், சிறந்த பிடியெடுப்பாளருக்கான விருதை கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக் கழக வீரர் எம்.என்.எம். அஸ்கானும், சுற்றுத்தொடரின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழக அணித் தலைவர் எம்.எச்.எம். ஜப்ரினும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018