மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். அந்த ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அக்ஸார் பட்டேல் களமிறங்கினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.

ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. மும்பை அணியின் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018