சீனா மீது தூதரக ரீதியில் நடவடிக்கை – பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை…

தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உட்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019