நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

மலேசியா: கடந்த வெள்ளிக்கிழமை பெவிலியன் ஆடம்பர அடுக்ககத்திலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தொடர்புடைய வீட்டில் போலீஸ் பறிமுதல் செய்த மலேசியா மற்றும் வெளிநாட்டு பணங்களின் கணக்கெடுப்பு இன்னமும் தொடர்வதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகம்ட் ஃபுஸி கூறியுள்ளார்.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை கடந்த மே 21ஆம் திகதி முதல் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தி ஸ்டார் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பணங்களின் எண்ணிக்கை இன்னமும் கணக்கிடப்படவில்லை. மாறாக கைப்பற்றப்பட்ட நகைகள், ஆடம்பர பொருட்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக இதர தனியார் நிறுவனங்களுடன் தேசிய வங்கியும் களமிறங்கியிருப்பதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளின் பணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதால் கணக்கெடுக கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக அனைத்தும் முறையாக கணக்கெடுக்கப்படுவதை போலீஸ் உறுதி செய்வதாகவும் போலிஸ் படை தலைவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான அடுக்ககம் என கூறப்பட்ட 5 இடங்களில் போலீஸ் பணங்கள் நிரம்பிய 72 சூட்கேசுகளையும், ஆடம்பர பொருட்கள் அடங்கிய 284 பெட்டிகளையும் கைபற்றியுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019