தேசிய ஹொக்கிப்போட்டிக்கு காரைதீவு அணி தெரிவு

தேசிய ஹொக்கி போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறை (காரைதீவு) மாவட்ட அணி தெரிவாகியுள்ளது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் நேற்றுமுன்தினம்(19)சனிக்கிழமை காரைதீவில் மாகாணமட்ட ஹொக்கி மற்றும் பீச் கபடிப்போட்டிகளை நடாத்தியிருந்தது.

கிழக்குமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் கே.மணிவண்ணன் அம்பாறை மாவட்ட விளையாட்டதிகாரி எம்.அமீர்அலி ஆகியோரின் கண்காணிப்பில் இப்போட்டிகள் சிறப்பாக விபுலாநந்த மத்திய கல்லூரி மைதானத்திலும் காரைதீவுக் கடற்கரையிலும் நடைபெற்றன.

இதில் மாகாணமட்ட ஹொக்கிப் போட்டியில் முதற்றடவையாக அம்பாறை அணி வெற்றிவாகை சூடியது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்ட அணிகள் களத்தில் மோதின.

கடந்தவருட சம்பியானன திருமலை அணியினர் பை முறையில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.

அதனால் முதல் போட்டியில் அம்பாறை மட்டக்களப்பு அணிகள் மோதியபோது 1-0 என்ற அடிப்படையில் அம்பாறை அணி வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் அம்பாறையுடன் திருமலை மோதியது. அதில் 2-1 என்ற புள்ளி அடிப்படையில் அம்பாறை அணி வெற்றிவாகைசூடி இவ்வருடத்திற்கான மாகாண சாம்பியனானது.

அம்பாறை அணியில் உள்ள 18வீரர்களுள் 16பேர் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகத்தைச்சேர்ந்த தமிழ்வீரர்களாவர்.

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத் தலைவரும் வவுனியா பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு உத்தியோகத்தருமான தவராசா லவன் கடந்த 5வருடங்களாக இந்தவீரர்களுக்கு பயிற்சியளித்து இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.

இவ்வருட அணிக்கு கே.நதீஸ்தரன் தலைமை தாங்க த.லவன் உள்ளிட்ட 18 வீரர்கள் இறுதிவரை போராடி இந்தச் சாதனையை நிலைநாட்டினர்.

கிழக்கு மாகாண சாம்பியனான அம்பாறை அணி எதிர்வரும் யூலை மாதம் 5 ,6 ,7, 8 ஆகிய திகதிகளில் மாத்தளையில் நடைபெறவிருக்கும் தேசியமட்ட ஹொக்கி போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar