தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டார்!

முதல்வர் பதவி விலக கோரியும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரியும் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.

இதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிகிகை விடுக்கப்பட்டது.

மேலும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அவை காவலர்கள் ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதையடுத்து தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஸ்டாலினும் மறியல் போராட்டம் நடத்தினார்.

பின்னர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீஸார் மற்ற திமுக தலைவர்களையும் கைது செய்தனர். ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் முன்பு திரளுவதால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019