எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்டத் தொடர் புத்தளம் லிவர்பூல் கழகம் சம்பியன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2018 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் புத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது,

புத்தளம் பிராந்தியத்துக்கான இறுதிப் போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் 2--0 என வெற்றி கொண்டதன் மூலம் லிவர்பூல் கழகம் சம்பியனாகியுள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில் நியூப்ரன்ட்ஸ் கழகத்தை வீழ்த்திய லிவர்பூல் கழகமும், யாழ் முஸ்லிம் யுனைடட் கழகத்தினை வீழ்த்திய பேர்ல்ஸ் அணியும் எப்.ஏ. கிண்ண பிராந்திய இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.

இந்த இறுதி போட்டியானது புத்தளம் தில்லையடி முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் அண்மையில் (15) இடம்பெற்றது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணியின் வீரர்களுக்குமே கோல் போடுவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போதிலும் இரு அணிகளுமே கோல்களை பெற முடியவில்லை.

இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி வீரர் நப்ரி தனது அணிக்கான முதலாவது கோலினை புகுத்தினார். எனினும் ஆட்டம் முடிவடையும் இறுதி நிமிடத்தில் பேர்ல்ஸ் கழகத்திற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவ் அணியின் வீரர் சும்ரி கோலாக்கியதால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்று போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க பிரதம நடுவரினால் தண்டனை உதை வழங்கப்பட்டது.

லிவர்பூல் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்ற இதன் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். புத்தளம் நகர சபை உறுப்பினர்களான பீ.எம். பர்வீன், பீ.எம். ரிப்ராஸ், நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019