இலங்கை- சிங்கப்பூர் நாளை பலப்பரீட்சை

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள நான்கு அணிகள் கலந்துகொள்ளும் வலைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக ஆசியாவின் முதல் நிலை வலைப்பந்து அணியான சிங்கப்பூர் அணி நாளை 27 தொடக்கம் 30ஆம் திகதி வரை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL) ஏற்பாடு செய்யும் இந்த தொடரில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு தேசிய அணிகளுடன் இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் இங்கிலாந்தின் PStar வலைப்பந்து கழகமும் பங்கேற்கின்றன.

ரவுன்ட்-ரொபின் (Round-robin) அடிப்படையிலேயே இந்த தொடர் நடைபெறவுள்ளது. இதன்போது ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் விளையாடும் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சம்பியன் பட்டத்திற்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அடுத்த இரண்டு அணிகளும் 3 ஆவது இடத்திற்காக போட்டியிடும்.

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு -இலங்கை தேசிய அணிக்கு முக்கிய பயிற்சியை வழங்கும் நோக்கிலேயே இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ட்ரிக்சி நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் வலைப்பந்து அரங்கில் பலமான போட்டியாளர்களாக இருப்பதோடு, இரு அணிகளும் நெருக்கமான பல போட்டிகளில் மோதியுள்ளன. குறிப்பாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளில் இரு அணிகளும் கடும் போட்டியாளர்களாக உள்ளன.

கடந்த 10 சம்பியன்ஷிப் தொடர்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை 7 தொடர்களில் சம்பியன் பட்டம் வென்று பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எவ்வாறாயினும் அண்மைக் காலத்தில் சிங்கப்பூர் உலக வலைப்பந்து தரவரிசையில் 20 ஆவது இடத்திற்கு முன்னேறி இலங்கையை விடவும் பலம் கொண்ட அணியாக மாறியுள்ளது. இதில் இலங்கை அணி ஆசியாவின் மற்றொரு பலம்மிக்க அணியான மலேசியாவுக்கு (24 ஆவது இடம்) பின்னால் தரவரிசையில் 25 ஆவது இடத்தில் காணப்படுகிறது. இவ்விரு அணிகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) முதல் போட்டியில் மோதவிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar