கனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு! பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவிப்பு!

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிசெளகா நகரில் இயங்கி வரும் பாம்பே பெல் என்ற இந்திய உணவகத்தில் வியாழக்கிழமை இரவு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.

அந்த வெடிகுண்டை இரு மர்ம நபர்கள் வெடிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிப்பதற்காக, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வெடிகுண்டு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் நேற்று (25) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

டோரொண்டோ நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதர், கனடாவில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோரிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவசர உதவி எண் (+1-67-668-4108) அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுஷ்மா தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019