மலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி ரூபாய் பறிமுதல்!

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 35 மூட்டைகளில் இருந்து 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மஹாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

இதனால் அங்கு 60 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசினால் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில் தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மலேஷிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில், பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் உட்பட 204 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலேஷிய பொலிசார் தெரிவிக்கையில் :- நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில், விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது சொகுசு பங்களாவில், 35 மூட்டைகளில் இருந்து, 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019