தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் (26-05-2018) நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பல்வேறு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தூத்துக்குடியில படுகொலைசெய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிவேண்டி

ஈழத்து உறவுகளின் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதேஇ இந்திய அரசே படுகொலைசெய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிவேண்டும் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனைத்து தமிழர்களும் இணைந்து குரல் எழுப்பவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019