மண்டைதீவு காணி சுவிகரிப்பு குறித்து ரணிலுடன் பேச்சு

ரணில் விக்கிரமசிங்கவிடம் மண்டைதீவு காணி சுவிகரிப்பு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மண்டைதீவு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு  பொது மக்களது காணிகள் 18 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான  பெயர் பட்டியல்களும் கிராம சேவகர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமது காணிகளை கடற்படையானது சுவீகரிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அப் பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது சம்மதம் இன்றி தமது காணிக்குள் கடற்படை நுழையுமாயின் தமது உயிரை கொடுத்தேனும் தமது மண்ணை மீட்போம் எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.

இக் கலந்துரையாடலின் போதே மண்டைதீவு காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019