யார் ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என ஸ்டாலின், திருநாவுக்கரசர் விவாதம் நடத்த தயாரா?- தமிழிசை

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அதை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாக உள்ளது. குழுக்கள் அமைத்து மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவேண்டும். அரசின் ஆதரவு இல்லாததால் வேறு யார் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் செல்கின்றனர்.

தூத்துக்குடியில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருக்க முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பொருளாதார ரீதியாக அரசியல் கட்சிகள் என்ன வாங்குகிறார்கள்? என்று எனக்கு தெரியாது.

ஸ்டெர்லைட் நிர்வாகிகள் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறியபோது நான் மறுத்துவிட்டேன். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார விவகாரங்கள் எனக்கு தெரியாது. அதுபற்றி கேட்காதீர்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உள்துறை மந்திரி வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியது தமிழக போலீஸ்தான். இதை கண்காணிக்க தமிழக உளவுத்துறை தவறிவிட்டது. ஆனால் துப்பாக்கி சூட்டிற்கு மோடிதான் காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதை ஜி.எஸ்.டி.க்குள் விரைவில் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து மக்கள் பயன்பெறுவார்கள்.

தூத்துக்குடிக்கு அமைச்சர்கள் செல்வது ஆரோக்கியமான சூழ்நிலையாகும். கலவரத்திற்கு பிறகு அப்படியே விட்டுவிடாமல் அரசு சென்று மக்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முழுபாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு என்ன செய்து உள்ளது என்ற விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்?. யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது? என்று விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் தயாரா?. காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ அதை மத்திய அரசு கடைபிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018