தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது - அமித்ஷா குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதாவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விமர்சித்து இருந்தது.

இது சம்பந்தமாக பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர் கூறும் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை தொழில் முதலீட்டுக்கு எதிராக அமைந்துள்ளது என்று கூறி இருந்தனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறினார். நான் 18 மாதங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக எச்சரித்து இருந்தேன். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:-தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கங்களை மத்திய உள்துறைக்கு அனுப்பி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சில விளக்கங்களை கேட்டு இருக்கிறார். விளக்கங்களை எதிர்பார்த்து மத்திய அரசு காத்து இருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சம்பவத்தை கையாண்ட முறை சரியில்லை. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் இது நடந்திருக்கிறது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அமித்ஷாவே துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக் காட்டி தமிழக அரசை விமர்சித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அ.தி.மு.க. தலைமை பாரதிய ஜனதாவுக்கும், மத்திய அரசுக்கும் ஏவல் ஆட்களாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறி வருகிறார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தமிழக அரசை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018