சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணம் கேப்டன் டோனி- பயிற்சியாளர் பிளமிங் பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மாலை சென்னை திரும்பியது.

2 ஆண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டி தொடரிலேயே சென்னை அணி கோப்பையை வென்று அசத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களை வாழ்த்தி ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ் மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி இடம் மாற்றம் என்பது எங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல.

ஒரு ஆட்டத்துடன் சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். புனேவின் சூழ்நிலையும் எங்களுக்கு தெரியும்.

அதற்கு தகுந்தபடி எங்களது ஆட்ட திட்டத்தை மாற்றி செயல்பட்டோம். எங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர்.ஷேன் வாட்சன் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார்.

பிக்பாஷ் போட்டியில் அவரது ஆட்டத்தை கவனித்து தான் அணிக்கு தேர்வு செய்தோம். அவர் எங்களது நம்பிக்கைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் இடம் பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்கள்.

சென்னை அணியின் வெற்றியில் கேப்டன் டோனியின் தாக்கம் மிகவும் முக்கியமானது. திறமையான கேப்டனான டோனி வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத் திறனை வெளிக்கொண்டு வரும் சக்தி படைத்தவர். டோனியின் பலத்தையும், அணியின் நல்ல ஆட்ட திட்டத்தையும் நாங்கள் சரியாக செயல்படுத்தினோம்.

இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

அப்போது சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உடனிருந்தார். 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018