கோபண்ணாவுக்கு ராகுல்காந்தி பாராட்டு

நேரு பற்றிய ஆங்கில புத்தகம் எழுதிய தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணாவுக்கு இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற ஆங்கில புத்தகம் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அதை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், புத்தகத்தை எழுதிய கோபண்ணாவுக்கு பாராட்டு தெரிவித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தங்களது புதிய வெளியீடான ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற புத்தகத்தை காணும் வாய்ப்பினை நான் பெற்றேன். நம்முடைய நாட்டின் முதல் பிரதமரின் வாழ்க்கை சரிதத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு ஒரு புதுமையான, வசீகரமான வழிபடங்களைப் பயன்படுத்துவதாகும். படங்களை மிக அழகாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

இதனை பொதுமக்கள் கண்டு அனுபவிக்கும் விதத்தில் நூலாகக் கொண்டு வந்திருப்பதற்காக நான் உங்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேரு என்கிற உன்னதமான மனிதரைப் பற்றி வெளிவந்துள்ள எழுத்துக்களின் தொகுப்பில், ஒரு மதிப்புமிக்க சேர்க்கையாக இந்த நூல் திகழும் என்பது எனக்குத் தெரியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019